நாமக்கல்லில் உள்ள பேட்டை மற்றும் கோட்டை பள்ளிவாசல்களில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று காலை முதல் சிறப்பு தொழுகையுடன் நடைபெற்றது. இஸ்லாமிய பொதுமக்கள் நோன்பைத் தொடங்கி, மாலை கோட்டை பள்ளிவாசலில் நோன்பு திறந்தனர். இதில் ஏராளமான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு ரம்ஜான் உணவு வழங்கப்பட்டது.