நாமக்கல் மாவட்டம் காதப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தந்தாயி, கணவரைப் பிரிந்து தம்பி அழகேசன் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், தந்தாயி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காதப்பள்ளி விஏஓ புகாரின்பேரில் நந்தி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தம்பி அழகேசன் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், ஒரு லட்சம் பணத்திற்காக அக்காவைக் கொன்றதாக அழகேசன் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து நல்லிபாளையம் போலீசார் அழகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.