நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே பாலப்பட்டியைச் சோ்ந்த ஐ. டி. ஐ. இரண்டாம் ஆண்டு மாணவா் சபரீஷ் (20), திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் அவரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா். சபரீஷின் அலறல் சப்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.