நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினா் நலத் துறை ஆணையருமான மு. ஆசியா மரியம் பங்கேற்று பேசினாா். பருவமழை முன்னெச்சரிக்கையாக மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரங்கள், மின் இயக்கிகள், மீட்பு படகுகள், அவசரச் சிகிச்சை வாகனங்கள், எல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து துறையும் தயாராக இருக்க உத்தரவிட்டார்.