நாமக்கல் பரமத்தி சாலை, சேலம் சாலை, உழவர் சந்தை, பழைய பேருந்து நிலையம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், காலை முதலே லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலையோரம் வியாபாரம் செய்பவர்களும், காலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.