நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு தலைமலை வெங்கடாஜலபதி திருக்கோவிலில் சிலைக்கடத்தல் மற்றும் உண்டியல் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக பக்தர்கள் தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எருமப்பட்டியைச் சேர்ந்த ஆர். சீனிவாசன் தலைமையிலான பக்தர்கள் குழு, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரிடம் அளித்த புகார் மனுவில், கோவிலின் ராஜகோபுரத்தில் இருந்த பழமையான பஞ்சலோக கலசம் மற்றும் விளக்கு நாச்சியார் சிலை ஆகியவை மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, அதற்குப் பதிலாக பழைய சிலை வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.