நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத ஊதியம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதைப் போல, இங்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.