நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு இன்று காலை தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ஆந்திராவை வழங்குவது போல உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல்லில் மாற்றத்தினால் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.