நாமக்கல்லில் உள்ள கொங்கு நாடு வேளாளர் சங்கம், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர் கே எம் அக்குபஞ்சர் கிளினிக் பயிற்சி மையம் இணைந்து, தனியார் திருமண மண்டபத்தில் இலவச அக்குபஞ்சர் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியது. இந்த முகாமில் சீன அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.