நாமக்கல் : போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி"

50பார்த்தது
நாமக்கல் : போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி"
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சார்பில் ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். தொப்பூர் அரசு சமுதாய சுகாதார மைய மருத்துவ அலுவலர் டாக்டர் சூரியபிரகாஷ், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போதைப் பொருள் தடுப்பு மற்றும் மனநல விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேசினார்.

 அப்போது, வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் விதம் குறித்து பேசினார். போதைப் பொருள் பழக்கத்தினால் ஏற்படும் உடல் பாதிப்புகள், மனநலச் சிக்கல்கள், சமூக மற்றும் குடும்ப பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசினார். "

தொடர்புடைய செய்தி