நாமக்கல்: மருந்து கடைகள் நாளை மூடல்

55பார்த்தது
நாமக்கல்: மருந்து கடைகள் நாளை மூடல்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை 800-க்கும் மேற்பட்ட சில்லறை மருந்துக் கடைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மொத்த மருந்து விற்பனை நிறுவனங்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. இதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் சுமார் 90 சதவீத மெடிக்கல் ஷாப்புகள் செயல்படாது என மருந்து வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி