நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 565 காசுகளாக இருந்து வந்தது. நேற்று (மே 24) நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்தி 570 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. கறிக்கோழி கிலோ ரூ. 126-க்கும், முட்டைக் கோழி கிலோ ரூ. 110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.