நாமக்கல்லில் நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டை விலை ஐந்து காசு உயர்த்தப்பட்டு 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பிற மண்டலங்களின் முட்டை விலையும் அறிவிக்கப்பட்டது. மேலும், ஒரு கிலோ முட்டைக்கோழி மற்றும் கறிக்கோழி 106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.