நாமக்கல்லில் மின்வாரிய முதல் மற்றும் 2-ம் நிலை அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி அனைத்து மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல்–திருச்செங்கோடு சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உதவி செயற்பொறியாளர் ஆனந்த்பாபு தலைமை தாங்கினார். நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். தொழிலாளர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்றும், உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.