தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், நாமக்கல்–திருச்செங்கோடு சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஊதிய உயர்வை உடனடியாக வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திட்ட செயலாளர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய திருத்தம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் பலர் கோஷங்கள் எழுப்பினர்.