நாமக்கல்: மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி; விவசாயிகள் வருத்தம்

65பார்த்தது
நாமக்கல்: மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி; விவசாயிகள் வருத்தம்
தமிழ்நாட்டுக் கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளை நடக்கிறது. 

குறிப்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடம், ஈரோடு மாவட்டம் சிவகிரி, தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் நல்லூரில் கொலை நடந்துள்ளது. இந்த குற்றச் சம்பவங்கள் சட்டவிழ்ச்சியை அடைந்ததாகவே காரணம் என கருதுகிறோம். 

தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கவனிக்க வேண்டியவர்களை கவனித்து விடுவதால் சிறையில் இருந்து சீக்கிரமாகவே வெளியில் வந்து விடுகின்றனர் என பேசினார். சிறையில் தாராளமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. 

மேலும் பள்ளி வளாகத்தின் வெளியில் போதைப்பொருட்களும் கிடைக்கின்றன. தமிழகத்தில் மரவள்ளிக் கிழங்குக்கான விலை வீழ்ச்சி அடைந்ததற்கு சாகுபடி அதிகரிப்பே காரணம். தமிழக அரசிடம் சரியான திட்டமிடுதல் இல்லை என்பதால் அதிகமாக விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்து விட்டனர் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி