விவசாய முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் கா. பாலசுப்பிரமணியன், தமிழக அரசு அனைத்து ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்திருப்பது விவசாயிகளுக்கும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் வரவேற்கத்தக்க நடவடிக்கை என தமிழக முதல்வருக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.