பள்ளிப்பாளையம்: ரயிலில் கஞ்சா கடத்தல்; 6 பேர் கைது

790பார்த்தது
பள்ளிப்பாளையம்: ரயிலில் கஞ்சா கடத்தல்; 6 பேர் கைது
விஜயவாடாவிலிருந்து ஈரோடு வழியாக ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், பள்ளிப்பாளையம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ரயிலில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வீசிய மூவர், அதை பெற்றுச் சென்ற மூவர் என மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் (21), கவின்குமார் (25), பூபதி (21), பவித்திரன் (27), சுப்ரமணி (22), சசிகுமார் (30) ஆகியோரிடம் இருந்து சுமார் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி