நாமக்கல்லில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு சந்தை நடைபெற்றது. சேந்தமங்கலம், ராசிபுரம், எருமைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வரும் 26 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதால், நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 80 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.