நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை, புதிய தலைமை மருத்துவமனை கட்டப்பட்டதால் பயன்பாடின்றி கிடக்கிறது. இப்பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் ஆனந்தராஜ் பழைய அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்.