நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் இன்று (ஜூன் 6) இரவு நாமக்கல் வருகிறாா். அதன்பிறகு, சனிக்கிழமை காலை 8 மணியளவில் நாமக்கல்லில் நடைபெறும் சுகாதார விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்கிறாா். காலை 9 மணியளவில், நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டி புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை சாா்பில் ரூ. 11.26 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறாா்.
புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறாா். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பல்நோக்கு மருத்துவ சேவை மையம் மற்றும் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணியை ஆய்வு செய்கிறாா்.