நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப், போக்குவரத்து அரசு அதிகாரிகளுடன் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அனைத்து பேருந்துகளும் கட்டாயமாக பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி, இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.