டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மதியம் நாமக்கல் காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். கோவில் உள்பிரகாரம், கழிப்பறை, அலுவலகப் பகுதி மற்றும் கோவில் பின்புறம் என அனைத்து இடங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.