நாமக்கல் மையப் பகுதியில் அமைந்துள்ள ரங்கநாதர் கோவிலில் சுமார் 75 படிகள் உள்ளன. இங்கு ரங்கநாதர் சுவாமி சைனா கோலத்தில் காட்சியளிக்கிறார். நாளை கூடாரவல்லி மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெறுவதை முன்னிட்டு, நரசிம்ம சுவாமி கோவிலில் இருந்து ரங்கநாதர் உற்சவ சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. உற்சவமூர்த்தியை ரங்கநாதர் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.