நாமக்கலில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை

1070பார்த்தது
நாமக்கல் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்களாக மதுக்கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுபிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று (மே 28) நாமக்கல் பகுதியில் ஒரு சில மதுக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி