நாமக்கல்: லாரி வேலை நிறுத்தம் திடீரென வாபஸ்

311பார்த்தது
நாமக்கல்: லாரி வேலை நிறுத்தம் திடீரென வாபஸ்
நாமக்கல் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தன்ராஜ், வருகின்ற 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் காலவரையற்ற லாரி வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்திருந்தார். தமிழக அரசு லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்ததை அடுத்து, நேற்று மாலை மாநில லாரி உரிமையாளர் சங்க தலைவர் தன்ராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், லாரி வேலைநிறுத்தம் தற்சமயம் வாபஸ் பெறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி