நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகள் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படவில்லை என குற்றம் சாட்டி தமிழ்ப்புலிகள் கட்சியினர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமையில் 60-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினர். "60 நாட்களாக மனு கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை இல்லை" என அவர்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து நல்லிபாளையம் காவல்துறையினர் 64 பேரை கைது செய்தனர்.