நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்காத அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.