நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப், திருச்செங்கோடு சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகளுடன் கலந்துரையாடியபோது, நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் வாடகை கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். ரூ. 130 வசூலிக்க வேண்டிய இடத்தில் ரூ. 200 வரையும், ரூ. 180 வசூலிக்க வேண்டிய இடத்தில் ரூ. 250 வரையும் வசூலிக்கப்படுவதாக வியாபாரிகள் கூறினர்.