ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி நிகழ்வில் கலந்துகொண்டு தற்பொழுது ராணுவ வீரர்களுக்கு விடுப்பில் இருக்கும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் சின்னகரசபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவா (எ) சிவசாமி மகன் சக்கரவர்த்தியை பாராட்டும் விதமாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன் எம்.பி. ராணுவ வீரரின் இல்லத்திற்கு நேரில் வந்து சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். மேலும் அவரது மனைவி மற்றும் பெற்றோர்களுக்கும் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
மேலும் இராணுவ வீரர் சக்கரவர்த்தியிடம் போரின் அனுபவம் பற்றி கேட்டறிந்தார். ராணுவ வீரர்களுக்கு என்றும் பக்கபலமாக இருப்பேன் என்று உறுதி அளித்தார். இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளரும் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்டப் பொருளாளர் சசிகுமார் உள்ளிட்ட மாவட்ட ஒன்றியக் கிளை செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.