நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாமக்கல் மாவட்டம் முழுவதும் விவசாய மின் இணைப்பு வழங்குவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், ஒரு இணைப்பிற்கு சுமார் 2.50 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த ஊழல் குறித்து கே.பி. ராமலிங்கம் விரிவாக தகவல்களை தெரிவித்தார்.