நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மூலக்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் முத்துக்குமார் (27) மற்றும் அவரது நண்பர் சங்கர் (30) ஆகியோர் சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவார பகுதியான பள்ளம்பாறையில் மாங்காய் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தனர். பணி முடிந்து 3ம் தேதி இரவு டூவீலரில் மூலக்குறிச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, படத்தியான்குட்டை பஸ் நிறுத்தம் அருகே பேளுக்குறிச்சியில் இருந்து வந்த கார் வேகமாக மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.