நாமக்கல்: 22 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

1பார்த்தது
நாமக்கல்: 22 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் 22 தனியார் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி அனுமதி பெறாமல் செயல்படும் இப்பள்ளிகள், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி, 2026-27 கல்வியாண்டு முதல் இப்பள்ளிகள் செயல்படக் கூடாது என்றும், எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி