வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகள் மூலம் பறவைக்காய்ச்சல் பரவி, சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காகங்கள் அடுத்தடுத்து இறந்தன. இதனால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,100 கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் மேற்கொண்டுள்ளனர். நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு இறைச்சி கோழிகள், முட்டை வாகனங்கள் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. பறவைக்காய்ச்சல் பாதிப்பு மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.