பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே சரளைமேடு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரத்தின் மகன் சபரிநாதன் (17), சனிக்கிழமை அன்று தனியாருக்கு சொந்தமான டிராக்டரில் கோழி கழிவுகளை ஏற்றிக்கொண்டு கீழ்சாத்தம்பூர் நோக்கி வந்துள்ளார். அப்போது, டிராக்டரின் ஒருபுற பிரேக்கை அழுத்தியதால் நிலைதடுமாறி வாகனம் சாலையில் கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த சபரிநாதனை மீட்டவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.