நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.115 ஆக குறைந்துள்ளது. நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டத்தில் முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 525 காசாக நீடிக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டத்தில் கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலையில் ரூ.5 குறைக்கப்பட்டது.