நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. பகல் நேர வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், இரவு நேர வெப்பநிலை 24 டிகிரி செல்சியசும் இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், காற்றின் ஈரப்பதம் 50 முதல் 60 சதவீதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.