நாமக்கல்: ஆட்டோ மோதி மூதாட்டி பலி

498பார்த்தது
நாமக்கல்: ஆட்டோ மோதி மூதாட்டி பலி
சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (35) என்பவர் நேற்று காலை 8 மணியளவில் மினி ஆட்டோவில் நாமக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அக்கியம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சாலையைக் கடக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த பாப்பம்மாள் (85) என்ற மூதாட்டி மீது ஆட்டோ மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேந்தமங்கலம் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி