நாமக்கல் நல்லிபாளையம் பகுதியில் உள்ள தலைமை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை இன்று மதியம் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடீரென ஆய்வு செய்தார். உள் நோயாளிகள் மற்றும் உணவு சமைக்கும் இடத்தை பார்வையிட்டு, நோயாளிகளிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பொது மக்களிடம் பேருந்து வசதி குறித்தும் விசாரித்த அமைச்சர், குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.