பரமத்தி வேலூர் அருகே பேக்கரியில், கரூர் மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் நேற்று இரவு கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இளைஞர்கள் சாலையில் செல்லும் பெண்களைக் கேலி செய்வதாகவும், அதற்கு பேக்கரிதான் காரணம் என்றும் கூறி, ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார். "என் பிள்ளையெல்லாம் இந்த ரோட்டில் போகிறது, உங்கள் கடையில் நின்று கொண்டு பெண்களைக் கிண்டல் செய்கிறார்கள்" என்று கூறி உரிமையாளரை மிரட்டியுள்ளார்.