நாமக்கல்: பிப்.25 முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் ஓடாது

0பார்த்தது
நாமக்கல்: வள்ளிபுரத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தன்ராஜ் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத் தலைவர் தன்ராஜ், லாரிக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை ரூ.850-லிருந்து ரூ.28,200 ஆக மத்திய அரசு உயர்த்தியது. இக்கட்டணத்தை குறைக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து பிப்.25 அன்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் பால், தண்ணீர் லாரிகள் தவிர்த்து அனைத்து சரக்கு லாரிகளும் இயங்காது என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி