நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த இரவு காவலர் செல்வராஜ், நேற்று இரவு கூலிப்பட்டி ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.