நாமக்கல்: ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்க விழா

83பார்த்தது
நாமக்கல்: ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்க விழா
நாமக்கல் வட்டார சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ப. சித்ரா தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் யுவசெந்தில்ராஜா முன்னிலை வகித்தார். விழாவில் நாமக்கல் வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட துவக்க விழாவில் விவசாயிகளுக்கு மரத்துவரை, காராமணி, அவரை, தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, கீரை உள்ளிட்ட விதைகள் பழச் செடிகள் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை செடிகள் அடங்கிய தொகுப்புகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ப. சித்ரா பேசுகையில் மேற்கண்ட தொகுப்புகள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவை 100 சதவித மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி