தனியார் ஹோட்டலில் லிப்டில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டனர்

1பார்த்தது
நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் உணவு விடுதி மற்றும் தங்கும் இடத்தில் இன்று மாலை, ஒரு கூட்டத்தை முடித்துக் கொண்டு லிஃப்டில் இறங்கும்போது திடீரென லிஃப்ட் பழுதானது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி லிஃப்டில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.