நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர் கூட்டத்தில், இல்லம் தேடி கல்வி திட்ட தொழிலாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியிடம் அவர்கள் மனு அளித்தனர். இந்த மனுவின் மூலம், தங்கள் கோரிக்கைகளை ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.