எலச்சிபாளையம் காவல் நிலையம் பின்புறத்தில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மாவட்ட கிளை நூலகம், 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் இடிந்து விழுந்ததால் புதிய கட்டிடம் கோரப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்கப்பட்ட புதிய நூலக கட்டிடம் ஓராண்டு ஆகியும் இதுவரை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்பாட்டுக்கு வரவில்லை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.