நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ச. உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானோரை இங்கு தேர்வு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் பங்கேற்கும் வேலையளிப்போரும், வேலைநாடுனரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.