நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுமார் 42 ஆயிரம் வருவாய் துறை சங்கங்கள் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட VAO, RI மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டங்கள் தீவிரமடையும் என சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.