நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே பூங்கா சாலையில் தொழில் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொண்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.