நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள நகரவை உயர்நிலைப் பள்ளியில் நூலக வார விழாவையொட்டி, இன்று பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. 'புத்தகம் படிப்பதில் என்ன பயன்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.